தேடல்

விதிமுறை மீறி வாகனங்கள் இயக்குபவர்கள் மீது நடவடிக்கை

பொள்ளாச்சி:போக்குவரத்து விதிமுறை மீறி வாகனங்கள் இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொள்ளாச்சியில் நடந்த போலீஸ் - பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்

பட்டது.பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் டி.எஸ்.பி., பாலாஜியிடம் அளித்த மனு:பொள்ளாச்சியில் இருந்து கோவை உட்பட வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பழநி, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பஸ்கள் பொள்ளாச்சி வழியாக கோவை செல்கின்றன.பொள்ளாச்சிக்கு வரும் இந்த பஸ்கள், கோவை ரோடு, வி.கே.வி., லே-அவுட் வழியாக

பாலக்காடு ரோட்டை அடைந்து பழைய பஸ் ஸ்டாண்ட்டை அடைய வேண்டும் என, போக்குவரத்து துறையினரும், போலீசாரும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், புதிய பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் இந்த பஸ்கள்,

பாலக்காடு ரோட்டிலுள்ள நகராட்சி அலுவலகம் அருகில் வந்து திரும்பி, பழைய பஸ் ஸ்டாண்டை அடைகின்றன. பாலக்காடு ரோட்டில், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி உள்ளது. போக்குவரத்து

விதிமுறைகளை மீறி வாகனங்களை திருப்புவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும், மற்ற வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்து

போலீசார், விதிமுறைகளை மீறி வாகனம் இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்ற டி.எஸ்.பி.,

பாலாஜி கூறுகையில், பொள்ளாச்சி நகரிலுள்ள பல ரோடுகளும் குறுகலாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது கடும்

நடவடிக்கை எடுக்கப்படும், என்õர்.