தேடல்

வேலை தேடி வேறு மாநிலம்! * கபடி வீராங்கனையின் சோகம்

ஜாஜ்பூர்:உலக கோப்பை வென்ற இந்திய பெண்கள் கபடி அணியில் இடம் பெற்ற ரஷ்மித சாஹு, வேலை தேடி வேறு மாநிலத்துக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.ஒடிசா மாநில, ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள, படானிரஞ்சன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஷ்மிதா சகா. பீகாரில் உலக கோப்பை கபடி போட்டி நடந்தது. இதன் பைனலில் இந்திய அணி, ஈரானை 25-19 என வென்றது. இந்த அணியில் ரஷ்மிதாவும் இடம்பெற்றிருந்தார். தற்போது வேலை எதுவும் கிடைக்காததால், தனது மாநிலத்தை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ளார்.இது குறித்து இவர் கூறியது:உலக கோப்பையை வென்றவுடன் ரயில்வே துறையினர் என்னை சந்தித்தனர். என்னுடைய கல்வி, பிற சான்றிதழ்களின் நகல்களை எடுத்துக் கொண்டனர். பின், ரயில்வேயில் பணி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், இன்று வரை அது தொடர்பாக எந்தவிதமான பதிலும் வரவில்லை. மேலும் ஒடிசா மாநில ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில், ரூ. 50,000 பரிசு தருவதாகவும் கூறினார்கள். அத்தொகையும் இது வரை கொடுக்கப்படவில்லை.மற்ற மாநிலத்தில், அம்மாநில வீரர், வீராங்கனைகள் எல்லோருக்கும் அரசுப் பணி உள்ளிட்ட பல்வேறு வழியில் ஊக்கம் கொடுக்கின்றனர். ஆனால் ஒடிசா அரசு, எங்களை புறக்கணிக்கிறது. என் குடும்பத்தை காப்பாற்ற, வேலை தேடி ஒடிசாவை விட்டு வெளியேறி வேறு மாநிலத்துக்கு செல்ல உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து ரஷ்மிதாவின் தந்தை துரியோதனன் கூறுகையில் உலக அளவிலான கபடி தொடரில், ஒடிசா மாநில சார்பில் எனது மகள் மட்டுமே பங்கேற்றார். எனவே அரசு பணி வழங்கப்படும் என நம்புகிறேன் என்றார்.