வேலூர்: வேலூர் மாநகராட்சி பெண்கள் பள்ளி அனைத்திலும், இலவசமாக தானியங்கி
நாப்கின் மிஷின் வழங்கப்படும், என, மேயர் கார்த்தியாயினி கூறினார்.
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேய நல்லூர் கிருபானந்த வாரியார் அரசு மகளிர்
மேல் நிலைப்பள்ளியில், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தானியங்கி நாப்கின்
மிஷினை, தன் சொந்த செலவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி,
மேயர் கார்த்தியாயினி வழங்கினார்.
இதன் துவக்க விழா, நேற்று நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணி இணை
செயலாளர் டாக்டர் அனுஷ்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்
மஞ்சுளா வரவேற்றார்.
வேலூர் மேயர் கார்த்தியாயினி, தானியங்கி நாப்கின் மிஷினை பள்ளிக்கு இலவசமாக
வழங்கினார். துணை மேயர் தர்மலிங்கம், கவுன்சிலர் ரமேஷ், தொழில் அதிபர்
லோகேஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேயர் கார்த்தியாயினி நிருபர்களிடம் கூறுகையில்,வேலூர் மாநகரட்சிக்கு
சொந்தமான பெண்கள் பள்ளிகள் அனைத்திலும், தானியங்கி நாப்கின் மிஷின்
இலவசமாக வழங்கப்படும். இதற்காக, ஸ்பான்சரில் தானியங்கி நாப்கின் மிஷின்கள்
பெறப்படும். இதில், 2 ரூபாய் செலுத்தினால் நாப்கின் தானாக வந்து விடும்,
என்றார்.
பின், பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை, மேயர் துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, காட்பாடி அனாதை இல்ல
குழந்தைகள், ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்ப்டடது.
