மிஷ்கினின், சித்திரம் பேசுதடி படத்தில் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்... பாடல் மூலம் பிரபலமானவர்கள் 3 பேர். ஒருவர் மாளவிகா, இன்னொருவர் அந்தப்பாட்டை பாடிய கானா உலகநாதன், மற்றொருவர் கானா உலகநாதன் பாடும்போது அவருக்கு மைக் பிடித்து வருபவர். அவர் பெயர் முத்துராஜா. அந்தபாட்டு மூலம் பிரபலமான முத்துராஜா தொடர்ந்து களவாணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடிகளில் கலக்கி வந்தார். சமீபத்தில் தான் அவருக்கு திருமணம் ஆனது. திருமணம் முடிந்து, மனைவியுடன் தேனி மாவட்டம், கே.கே. பட்டியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார். அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனையடுத்து மதுரை, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முத்துராஜாவுக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தும் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மரணம் அடைந்தார். மறைந்த முத்துராஜாவின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் நடக்கிறது.
வாளமீனுக்கும், விலாங்கு மீனுக்கும் புகழ் முத்துராஜா மரணம்...!
தினமலர் – பு, 22 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
