வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே வெளிநாடு செல்ல செலவுக்கு பணம் தர மறுத்த பாசமான மகனை வேதாரண்யம் போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தை சேர்ந்தவர்
விவசாயி சுப்பிரமணியம் (75). இவரது மகன் குருபரன் (35). இவர் வெளிநாடு
செல்வதற்காக தனது தந்தை சுப்பிரமணியனிடம் பலமுறை பணம் கேட்டுள்ளார். ஆனால்,
தந்தை சுப்பிரமணியம் தர மறுத்தார். இதனால், மகன் குருபரன் ஆத்திரம்
அடைந்திருந்தார்.
நேற்று மதியம் மூன்று மணி அளவில் சுப்பிரமணியம் வீட்டில்
தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த குருபரன், நெல் குத்துவதற்காக
வீட்டில் வைத்திருந்த உலக்கையால் சுப்பிரமணியனை உடல் முழுவதும் சரமாரியாக
அடித்து தாக்கினார்.
இதில், பலத்த காயமடைந்த சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தந்தை இறந்து விட்டதையறிந்த குருபரன் வேதாரண்யம் போலீஸ் ஸ்டேஷனுக்கு
சென்று, தான் தனது தந்தையை உலக்கையால் அடித்து கொன்று விட்டதை
ஒப்புக்கொண்டு போலீஸில் சரண் அடைந்தார்.
இதையடுத்து வேதாரண்யம் டி.எஸ்.பி., குணசேகரன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர்
பாலசுப்பிரமணியம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, முதியவர்
சுப்பிரமணியன் சடலத்தை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத
பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். அங்கு இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது.
