திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்
விவசாயிகளுக்கு வேளாண் வணிகம் சார்ந்த பயிற்சி, திருவாரூர் மாவட்ட துணை
வேளாண் இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. திருத்துறைப்பூண்டி
வேளாண் உதவி இயக்குனர் நடேசன் முன்னிலை வகித்தார். வேளாண் வணிக அலுவலர்
சாமிநாதன் வரவேற்றார். இதில் விவசாயிகளை உற்பத்தி சார்ந்த வேளாண் எனும்
நிலையிருந்து, வணிகம் சார்ந்த வேளாண் எனும் கோட்பாட்டுக்கு தயார் செய்யும்
நோக்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தோட்டக்கலை உதவி இயக்குனர் சீனிவாசன்,
வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் மாரிமுத்து ஆகியோர் பயிற்சி அளித்தனர். உதவி
வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
