மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபனில் அசத்துகிறார் ரஷ்யாவின் மரியா ஷரபோவா. இதுவரை 9 கேம்களை மட்டும் இழந்த இவர், புதிய சாதனையுடன் அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் நம்பர்-2 வீராங்கனையான ஷரபோவா, சக வீராங்கனை எகடரினா மகரோவாவை சந்தித்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் கடந்த 5 சுற்றில் குறைந்த கேம்களை(9) இழந்து, அரையிறுதிக்கு முன்னேறிய இவர், 22 ஆண்டு கால சாதனையை முறியடித்தார். முன்னதாக 1991ல் அமெரிக்காவின் மோனிகா செலஸ் 12 கேம்களை இழந்து அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.மற்றொரு போட்டியில் சீனாவின் லீ நா, போலந்தின் ரத்வன்ஸ்காவை 7-5, 6-3 என வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.ஜோகோவிச் முன்னேற்றம்:ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் நம்பர்-1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், செக் குடியரசின் தாமஸ் பெர்டிக்கை சந்தித்தார். இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் செட்டை 6-1 என வென்றார். இரண்டாவது செட்டை பெர்டிக் 6-4 என வென்று பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என வென்றார். முடிவில், ஜோகோவிச் 6-1, 4-6, 6-1, 6-4 என்ற செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் டேவிட் பெரர், சக வீரர் நிகோலஸ் அல்மாக்ரோவை 4-6, 4-6, 7-5, 7-6, 6-2 என்ற செட்களில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் பூபதி ஜோடிகலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பூபதி, ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா ஜோடி, ஜிமோன்ஜிக்(செர்பியா), கேத்தரினாவை(சுலோவாக்கியா) 3-6, 6-2, 10-5 என வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றது.* மற்றோரு கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜர்மிளா, மாத்யூ ஜோடியிடம் 3-6, 2-6 என்ற நேர் செட்கணக்கில் வீழ்ந்தது.
ஷரபோவா சாதனை வெற்றி *அரையிறுதிக்கு முன்னேறினார்
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- அரையிறுதியில் ஷரபோவா
- பைனலில் நடால்
- டென்னிஸ்: காலிறுதியில் பூபதி ஜோடி …
- சவுரப் பாட்டீல் வெற்றி
- காலிறுதியில் சானியா ஜோடி
- சானியா ஜோடி வெற்றி
- அரையிறுதியில் திவிஜ் ஜோடி
- ஆன்டி முர்ரே தோல்வி
- பூபதி-போபண்ணா தோல்வி
- செரினா சாம்பியன்
- சானியா ஜோடி தோல்வி
- பூபதி - போபண்ணா ஜோடி தோல்வி
- பைனலில் விஜயாந்த் மாலிக்
- போபண்ணா ஜோடி தோல்வி
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 53 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 59 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 1 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

