ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறேன் - அசின்

`கஜினி படம் மூலம் இந்திக்கு அறிமுகமானவர் அசின். இதில் அமீர்கான் ஜோடியாக நடித்தார். பின்னர் லண்டன் டிரீம்ஸ் ரெடி படங்களில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். தற்போது போல்பச்சன் ஹவுஸ்புஸ்-2, 2 ஸ்டேட்ஸ் சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் நடிக்கிறார். அமீர்கான், சல்மான்கானை தொடர்ந்து ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்க விரும்பினார். அதுவும் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்து அசின் கூறியதாவது:-
ஷாருக்கான் ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். ஏற்கனவே அவருடன் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு நழுவி போனது. இப்போது நிறைவேறி இருக்கிறது. தற்போது நான் நடிக்கும் போல்பச்சன், ஹவுஸ்புல் 2 படங்களில் மட்டுமே என் முழு கவனமும் உள்ளது. ரன்பீர்கபூருடன் நடிக்க உள்ள “2 ஸ்டேட்ஸ்” படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுவோம் என்றார்.