ஹோபர்ட்: இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், ஹியுஸ் சதம் அடித்து கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில், இலங்கை 2-1 என முன்னிலை வகித்தது. ஐந்தாவது ஒருநாள் போட்டி ஹோபர்டில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்தனா பீல்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக கேப்டன் கிளார்க்கு பதில் பெய்லி கேப்டன் பொறுப்பை ஏற்றார்.ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (10), வேட் (23) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. கேப்டன் பெய்லி (17) நிலைக்கவில்லை. டேவிட் ஹசி (34) ஓரளவு கைகொடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹியுஸ் ஒருநாள் அரங்கில் 2வது சதத்தை பதிவு செய்தார். மேக்ஸ்வெல் (9) ஏமாற்றினார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது ஹியுஸ் (138) அவுட்டாகாமல் இருந்தார்.இலங்கை அணிக்கு தில்ஷன், மலிங்கா, குலசேகரா, பெரேரா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.---
ஹியுஸ் சதம் * இலங்கைக்கு 248 ரன்கள் இலக்கு
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கோப்பை வென்றது ஜிம்பாப்வே : சிபண்டா …
- பெங்களூரு அணி 106 ரன்கள்
- வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஜிம்பாப்வே …
- பாகிஸ்தானிடம் வீழ்ந்தது ஸ்காட்லாந்து
- ஹீரோ மில்லர்: 38 பந்தில் 101 …
- ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: வங்கதேசம் …
- ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி : …
- பெங்களூரு திரில் வெற்றி: கோஹ்லி, …
- கோல்கட்டா அணியிடம் வீழ்ந்தது புனே …
- பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை …
- நடையை கட்டியது நடப்பு சாம்பியன: …
- கிரிக்கெட்: புனே அணிக்கு வெற்றி இலக்கு …
- கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு வெற்றி …
- கிரிக்கெட்: கிரிக்கெட்: மும்பை அணிக்கு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது: பி.சி.சி.ஐ.,
தினமலர் - 56 நிமிடங்கள் முன்ஹீரோக்களுக்கு இணையான நடிகரான பரோட்டா சூரி!
தினமலர் - 1 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்புக்கிகளை கட்டுப்படுத்த முடியவில்லை: ஸ்ரீனிவாசன்
தினமலர் - 1 மணிநேரம் 11 நிமிடங்கள் முன்தேசிய அணுசக்தி கழகம் அறிவிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்மேட்டூர் அணை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

