பெண்கள் மது அருந்துவது பற்றி த்ரிஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு மதுபாட்டில்களை அனுப்பி வைக்க இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. சமீபத்தில் விஷால்-த்ரிஷா நடிப்பில் வெளியான சமர் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக சமீபத்தில் பிரஸ்மீட் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நடிகை த்ரிஷாவிடம் நீங்கள் இந்தபடத்தில் மது அருந்துவது போன்று நடித்துள்ளீர்கள், பெண்கள் மது குடிப்பது பற்றி தங்களது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, அது அவரவர் விருப்பம் என்று கூறினார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவருக்கு மதுபாட்டில்களை அந்தகட்சி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் சென்னை நகர தலைவர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், த்ரிஷா கூறிய கருத்து நமது கலாச்சாரத்திற்கு எதிரானது. அவரது கருத்து பெண்களை மது குடிக்க தூண்டும். இதுதொடர்பாக அவர் வருத்தமும் தெரிவிக்கவில்லை. எனவே அவருக்கு மதுபாட்டில்களை அனுப்ப உள்ளோம். கூடவே மதுவால் ஏற்படும் விளைவுகள் பற்றிய புத்தகமும் ஒன்றையும் அனுப்பி வைக்க உள்ளோம் என்றார்.
த்ரிஷாவுக்கு சரக்கு பாட்டில் அனுப்ப இந்து மக்கள் கட்சி முடிவு!
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்ஆழ்வார்குறிச்சியில் பலத்த மழை :5 பேர் காயம்
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பைனலுக்கு செல்லுமா சென்னை: இன்று மும்பையுடன் டிஷ்யூம், டிஷ்யூம்
தினமலர் - 2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்சினிமாவில் ஸ்ரீசாந்த்: சகோதரர் தயாரிப்பில் நடிக்க ஏற்பாடு
தினமலர் - 2 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பாட்மின்டன்: இந்தியா அவுட்
தினமலர் - 2 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

