தூத்துக்குடி : சென்னை மற்றும் திருப்பூரில் நடந்த கொள்ளை சம்பவம் எதிரொளியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாங்குகள், நகைக்கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜூலு தூத்துக்குடியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.
சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா பாங்கில் ரூ.22 லட்சம் கொள்ளைபோனது. அதைத் தொடர்ந்து சென்னை கீழ்க்கட்டளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பாங்கில் ரூ. 15 லட்சம் என இரு பாங்கிலும், 37 லட்சம் ரூபாயை ஐந்துபேர் கொண்ட கொள்ளை கும்பல்கள் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவங்களில் கண்காணிப்பு கேமரா க்கள் இல்லா காரணத்தினால் குற்றவாளி களை அடையாள காணுவதில் போலீ சாருக்கு சிரமம் ஏற்பட்டது. இனியும் இது போன்று சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துவிடக் கூடாது என்பதற்காக போலீசார் உஷராகி வருகின்றனர். இதில் முதற்கட்டமாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருக்கும் இடங்கள் குறித்து தகவல் சேகரிப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜூலு தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி.,அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தூத்துக்குடி எஸ்.பி.ராஜேந்திரன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாங், தனியார்பாங்க், நகைக்கடைகள், உரிமையாளர்கள், பாங்க் மேலாளர்கள் என மொத்தம் 250 பேர் கலந்து கொண்டனர். இதில் நகைகடைகள், பாங்கில் கொள்ளை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பாங்கில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும், இந்த வசதிகள் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.
மேலும் காவலாளிகள் அமர்த்தப்பட வேண்டும். போலீஸ்ஸ்டேசனுக்கிடையே அலறாம் இணைப்பு பொருத்தப்பட வேண்டும். சந்தேகப்படும்படியாக நகை கடைகள் அல்லது பாங்குகளில் சுற்றித் திரிந்த நபர்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேனில் தெரிவிக்க வேண்டும் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி.இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.பி.சப்இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் மாவட்டத்தில் உள்ள போலீசார் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பாங்க் ,நகைக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- வங்கிகளில் பொருத்தப்படாத கண்காணிப்பு …
- கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுரை
- போலீசார் ரோந்து செல்கிறார்களா? பட்டா …
- தர்மபுரி மாவட்ட நகை கடைகளில்
- தமிழக - ஆந்திர எல்லை பாதுகாப்பு …
- ஊர்காவல் படைக்கான ஆட்கள் தேர்வு
- அரசு ஆஸ்பத்திரி அனைத்து வார்டையும் …
- வீடுகளை உடைத்து திருடும் 3 பேர் கைது …
- ஆந்திரா முழுவதும் உள்ள கோவில்கள் …
- இடிந்து விழும் இ.எஸ்.ஐ., குடி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தனித்துவம் மிக்க ஸ்ரீவி பிசினஸ் ஸ்கூல்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்போடியில் ரூ. 68.75 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்88.22 சதவீதம் தேர்ச்சி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்கோல்கட்டா கலக்கல் வெற்றி! * நரைன் சுழலில் மும்பை காலி
தினமலர் - 47 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
