தாத்தா வேடத்தில் பாண்டியராஜன்!

நடிகரும், டைரக்டருமான பாண்டியராஜன் புதிய படமொன்றில் தாத்தா வேடமேற்று நடித்திருக்கிறார். டைரக்டர் விக்னேஷ் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் விண்மீன்கள். இப்படத்தில் டைரக்டர் ஷங்கர், விஷ்வா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். நடிகர் பாண்டியராஜன் தாத்தா வேடத்தில் நடித்துள்ளார்.

இதுபற்றி பாண்டியராஜன் அளித்துள்ள பேட்டியில், இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் விக்னேஷ் மேனனுக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். நான் வரும் பல காட்சிகள் ஊட்டி மலைப்பகுதிலேயே படமாக்கப்பட்டுள்ளன. இது வழக்கமான கதையல்ல. வித்தியாசமான கதை. திரைப்படம் வெளிவந்தால் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் இருக்கும், என்று கூறியுள்ளார்.

மானஸ் பில்ம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார்.