புதுச்சேரி:ஸ்வீட் ஸ்டாலில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை
போலீசார் கைது செய்தனர்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் விரிவு, வசந்தபுரத்தில்
குடியிருப்பவர் வீரபத்திரன். இவர் ஏர்போர்ட் சாலையில் ஸ்வீட் ஸ்டால்
வைத்துள்ளார். இக்கடைக்கு முத்துலிங்கம்பேட்டையைச் சேர்ந்த சந்தோஷ் 26,
பாரூக் நகரைச் சேர்ந்த சந்துரு 24 ஆகியோர் வந்தனர். வீரபத்திரனிடம்
கத்தியைக் காட்டி மிரட்டி,ரூ. 300 பறித்துக் கொண்டு, 3 மிக்சர்
பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றனர்.வீரபத்திரன் லாஸ்பேட்டை போலீஸ்
நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், ஏட்டு
பிரபாகரன் வழக்குப்பதிந்து, சந்தோஷ், சந்துரு ஆகியோரைக் கைது செய்து பணம்
மற்றும் கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
