மிகவும் பிரபலமான வீடியோக்கள்
கள்ள நோட்டு புழக்கம் சி.பி.ஐ., விசாரணை
3 மணிநேரம் முன்
1:15 | 0 பார்வைகள்
கள்ள நோட்டுக் கும்பலின் "நெட்வொர்க்' குறித்து கோவை, திருப்பூரில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பனிப்பாறை சரிவு 11 ராணுவ வீரர் பலி
4 மணிநேரம் முன்
1:09 | 491 பார்வைகள்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவில் சிக்கி, 11 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தில், 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் பனிப்பாறையில் சிக்கிக் கிடப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று கருதப்படுகிறது.
டீசல் விலை உயர்வு லாரிகள் வேலை நிறுத்தம்
5 மணிநேரம் முன்
1:16 | 401 பார்வைகள்
மீண்டும் டீசல் விலை உயர்த்தப்பட்டால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சென்னை வங்கி கொள்ளையர் என்கவுன்டரில் கொலை
5 மணிநேரம் முன்
2:34 | 859 பார்வைகள்
சென்னை வங்கிகளில் கொள்ளையடித்ததாக கருதப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தச் சென்றபோது, அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வங்கிக் கொள்ளையர்கள் என்பது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் உண்ணாவிரதம் தொடர்கிறது
பு, 22 பிப்., 2012
1:07 | 751 பார்வைகள்
தமிழக நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அணு உலை எதிர்ப்பாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
அணு உலைக்கு ஆதரவு வக்கீல்கள் உண்ணாவிரதம்
பு, 22 பிப்., 2012
0:53 | 289 பார்வைகள்
கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து மதுரையில் வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் ரிக்ஷா அறிமுகம்
பு, 22 பிப்., 2012
1:59 | 280 பார்வைகள்
பேட்டரியில் இயங்கும் ரிக்ஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேட்டரியை சூரிய ஒளியில் ரீசார்ஜ் செய்யும் வசதியுடன் இந்த ரிக்ஷா உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கி கொள்ளையில் வீடியோ சிக்கியது
பு, 22 பிப்., 2012
1:27 | 853 பார்வைகள்
சென்னை பெருங்குடி, கீழ்கட்டளை வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நிழல்படங்களை மாநகர போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்துள்ளார்.
