தேடல்

அடையாற்றில் தினமும் கொட்டப்படும் 100 லாரி கழிவுநீர்

சென்னை : கவுல்பஜார்

அருகே, அடையாற்றில், தினமும், 100 லாரி, செப்டிக் டேங்க் கழிவுநீர்

கொட்டப்படுகிறது. இதனால், அடையாறு மேலும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பொதுப்பணி துறை அமைச்சர் உருவாக்கியுள்ள, அடையாறு நீர் சேகரிப்பு திட்டம் வீணாகும் அபாயம் உள்ளது.
அடையாற்றில் மா”
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மணிமங்கலம் அருகே துவங்கும் அடையாறு, திருநீர்மலையை கடக்கும் போது, மாசடைய துவங்கி விடுகிறது.
தோல் தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் உள்ளாட்சிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த ஆறு மாசடைவதற்கான, பிரதான காரணங்களாக உள்ளன.
சமீபகாலமாக,

சென்னை புறநகர் உள்ளாட்சிகளில்இருந்து சேகரிக்கப்படும், செப்டிக்

டேங்க் கழிவுநீரை லாரி உரிமையாளர்கள் பகிரங்கமாக அடையாற்றில் கொட்டி,

ஆற்றின்
நீர்வளத்தை கெடுத்து
வருகின்றனர்.
கவுல் பஜார் அருகே...
பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர், திருநீர்மலை, பல்லாவரம் பகுதிகளில் இருந்து,
தினமும், 100 லாரி அளவிற்கு,
செப்டிக் டேங்க் கழிவுநீர் சேகரமாகிறது. இந்த கழிவுநீர், பெருங்குடியில் உள்ள
”த்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். அங்கு ”த்திகரிக்கப்பட்ட நீர், கடலுக்குள் விடப்படும்.
ஆனால், டீசல் செலவை
மிச்சப்படுத்த

நினைக்கும் லாரி உரிமையாளர்கள், கவுல் பஜார் பகுதியில், இந்திரா நகர்

தரைப்பாலம் வழியாக ஆற்றை கடந்து, தரப்பாக்கம் அணுகு சாலையை ஒட்டி, தனியார்

நிலத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள, 150 அடி நீள பாதை வழியாக சென்று,

அடையாற்றில் கழிவுநீரை கொட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, கவுல்பஜாரை சேர்ந்த சேகர் கூறுகையில்,
இந்த லாரிகளில், பெரும்பாலானவை உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு சொந்தமானது. இதனால் போலீசாரும், மாசு
கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் இந்த பிரச்னையில் தலையிடுவதில்லை. இதே நிலை நீடித்தால், அடையாறு ஆற்றை காப்பாற்றுவது, முடியாத
விஷயமாகிவிடும், என்றார்.
அமைச்சரின் திட்டம்
வடகிழக்கு

பருவமழையின் போது அடையாறு ஆற்றை, பொதுப்பணி துறை அமைச்சர் ராமலிங்கம்

ஆய்வு செய்தார். அப்போது, உபரிநீர் வெள்ளமாக கடலுக்கு பாய்வதை பார்த்த

அவர், அடையாறு ஆற்றில் தடுப்பணை அல்லது செயற்கை ஏரி அமைத்து, இந்த

உபரிநீரை சேகரிக்க திட்டமிடுங்கள் என, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆனால்,

லாரி உரிமையாளர்கள் கொட்டும் கழிவுநீர், நந்தம்பாக்கம் தடுப்பணையில்

சேகரமாகியுள்ள மழைநீருடன் கலக்கிறது. இதனால், மழைநீரை சேமித்து, நிலத்தடி

நீர் வளத்தை
மேம்படுத்தும் வகையில் வகுக்கப் பட்ட, அமைச்சரின் திட்டம் வீணாகும் அபாயம் உள்ளது.
அமைச்சர்,

அடையாறு ஆற்று நீரை பயன்படுத்த நினைக்கும் நிலையில்,ஆளும் கட்சி

பிரமுகர்கள் ஆற்றை மாசுபடுத்துவது, பொதுமக்களை அதிருப்தியடைய செ#துள்ளது.
கட்டுப்படுத்திய ஆட்சியர்
சந்தோஷ்

மிஸ்ரா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது, இந்த விஷயம் தொடர்பாக

கடும் நடவடிக்கை எடுத்தார். புகைப்பட ஆதாரத்துடன், கழிவுநீர் லாரிகள் மீது

புகார் கொடுத்தால், லாரியின் உரிமத்தை அவர் ரத்து செய்தார். ஆனால்,

தற்போதுள்ள மாவட்ட நிர்வாகம் இதை கண்டுகொள்வது இல்லை என, கூறப்படுகிறது.