தேடல்

அடையாள எண் பெறாத உர வியாபாரிகள் உரிமம் ரத்து:அரசு எச்சரிக்கை

மதுரை : தொலைபேசி

வழி கண்காணிப்பு மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்து, அடையாள எண் பெறாத

உரவியாபாரிகளின், உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ்,

உரவியாபாரிகள் பதிவு செய்ய வேண்டும். டிச., 10க்குள் பதிவு செய்து, அடையாள

எண்ணை பெறாவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும். பதிவு செய்த பின்,

மீண்டும் உரிமம் வழங்கப்பட்டு, உரம் சப்ளை செய்யப்படும்.
மாவட்ட

விவசாயத் துறை இணைஇயக்குனர் ராஜேந்திரன், உதவிஇயக்குனர் சுருளிபொம்மு

கூறுகையில், அடையாள எண் பெறாதவர்களுக்கு உரம் சப்ளை செய்யும்

கம்பெனிகளுக்கு, மானியம் நிறுத்தப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
தொடக்க

வேளாண்மை சங்கம் உட்பட 543 உரவினியோக நிறுவனங்களில் 299 பேர் அடையாள எண்

பெற்றுள்ளனர். அடையாள எண் பெறாதவர்கள் உரவிற்பனை செய்ய இயலாது,
என்றனர்.