தேடல்

அணு உலை தொடர்பான 22 வது ஒப்பந்தம் ; இந்தியா - பாகிஸ்தான் இன்று ஆவண பரிமாற்றம்

புதுடில்லி: அணு உலை நிறுவுதல் தொடர்பான 22 வது தொடர் ஒப்பந்தம் இந்தியா- பாகிஸ்தான் இடையே இன்று பரிமாற்றம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் புத்தாண்டு பிறக்கும் ஜனவரி முதல் வாரத்தில் இந்த ஒப்பந்தம் புதுப்பித்து கொள்ளப்படும். டில்லியில் இன்று இரு நாட்டு அதிகாரிகளும் இந்த ஒப்பந்த பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.

1988 ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1991 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே கடந்த 21 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் தாங்கள் மேற்கொள்ளும் அணு தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தங்களிடம் உள்ள சிறப்புக்கள் மற்றும் போர் மூளும் போது இந்த பகுதியில் தாக்குதல் நடத்தாமல் காத்துக்கொள்ளும் விதமான சரத்துக்களும் இதில் அடங்கி இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின்படி இது வரை இரு நாடுகளும் சரியாக பின்பற்றி வருவதாக டில்லி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தகவலை இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.