தேடல்

அந்தோணியின் ஆஸ்திரேலியா பயணம் ஒத்தி வைப்பு

புதுடில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி வரும் 12-ம் தேதிஆஸ்தி‌ரேலியாவிற்கு செல்ல இருந்த பயணம்திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பாதுகாப்புத்துறை அமைச்சர்அந்தோணி வரும் 12-ம் தேதி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். அதே தேதியில் பிரான்ஸ் அதிபர்‌ஹோலண்டே முதன் முறையாக இந்தியா வருவதை முன்னிட்டு அந்தோணியின் பயணம்ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்டு அதிகாரிகளிடையேபேசிய பின்னர்முடிவு தெரிவிக்கப்படும் என கூறினர்.

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்‌டே முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு இருநாட்டு ராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையில் ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

இதன்படி அமெரிக்காவின் எப்-16,எப்-18 மற்றும் ரஷ்யாவின் மிக் ரக விமானங்களுக்கு இணையாகபிரான்ஸ் நாட்டின் ராணுவ தளவாட நிறுவனத்துடன் இந்திய ராணுவம்ஆயுத கொள்முதலில் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் ‌வ‌கையில் பிரான்ஸ் அதிபருடன்ஒப்பந்தத்தில் கையெழுத்தாக உள்ளது. இதன் காரணமாகவே அந்தோணியின் ஆஸ்திரேலிய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.