தேடல்

அனல் பறக்கும் இந்தியா-ஆஸி., தொடர் * கில்கிறிஸ்ட் கணிப்பு

புதுடில்லி:இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடரில் அனல் பறப்பது நிச்சயம், என, முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பிப்., 22 முதல் மார்ச் 24 வரை) பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் பிப்., 22 முதல் 26 வரை நடக்கிறது.சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்திலுள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை முழுமையாக (4-0) வென்றால் 121 புள்ளிகள் கிடைக்கும். அதேநேரம், இப்போது முதலிடத்திலுள்ள தென் ஆப்ரிக்க அணி (124), பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தால், தரவரிசையில் நீண்ட இடைவெளிக்குப் பின், நம்பர்-1 இடத்தை ஆஸ்திரேலியா பிடிக்கலாம்.இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் கூறியது:டாப்-3 அணிகள் எல்லாமே சமபலம் பொருந்தியவை தான். இந்த அணிகள் வாய்ப்பு கிடைத்தால் ஒன்றுக்கொன்று மற்ற அணிகளை எப்போது வேண்டுமானா