தேடல்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: இரு போலீசார் பலி

டோபிகா:அமெரிக்காவின், கன்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், இரண்டு போலீசார் பலியாயினர்.அமெரிக்காவில், துப்பாக்கி சூடு சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில், 26 பேர் பலியாயினர்.இதற்கிடையே, கன்சாஸ் மாகாணம், டோபிகா நகரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மூன்று போலீசார் மீது, ஒரு வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி, திடீரென துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு போலீசார் பலியாயினர்.மூன்றாவது போலீசார் கொடுத்த தகவலின் பேரில், 22 வயதுடைய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.