தேடல்

அமெரிக்காவில் தீபாவளி தபால் தலை: எம்.பி.,க்கள் கோரிக்கை

வாஷிங்டன்: தீபாவளி தொடர்பான தபால் தலையை வெளியிடும் படி, அமெரிக்க எம்.பி.,க்கள் கோரியுள்ளனர்.இந்திய வம்சாவளியை சேர்ந்த, அமி பெரா உள்ளிட்ட, மூன்று அமெரிக்க எம்.பி.,க்கள், அமெரிக்க அஞ்சல் துறை, தீபாவளி தொடர்பான தபால் தலையை வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தை அந்நாட்டு பார்லிமென்டில் கொண்டு வந்துள்ளனர்.ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கான தபால் தலை, அமெரிக்காவில் ஏற்கனவே, வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான பண்டிகையான தீபாவளியை கவுரவிக்கும் வகையில் தபால் தலை அறிமுகப்படுத்த வேண்டும் என, இவர்கள் கோரியுள்ளனர்.அமெரிக்காவில், தீபாவளியையொட்டி, இந்தியர்களுக்கு மட்டும், விடுமுறை அளிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.