தேடல்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

பென்சில்வேனியா: அமெரிக்காவின் பென்சில்வோனியா நகரில்பெண் உட்பட மூன்று பேரை சுட்டுக்கொன்ற மர்ம நபர் சுட்டுகொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் மூன்று போலீசார் காயமடைந்தனர்.பென்சில்வோனியாவின் பிராங்க்ஸ்டவுன் நகரில் அந்நாட்டு நேரப்படி வெள்ளி காலை 9 மணியளவில் நடந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கானஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த பெண்ணை சுட்டுக்கன்றஅந்த நபர், மேலும்இரண்டு நபரைசுட்டு கொன்றான். இது குறித்து அறிந்த போலீசார் விரைந்துவந்து, அந்த நபரை பிடிக்க முயற்சி செய்தனர். இதனைதொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்தநபர் சுட்டுக்கொல்லப்பட்டான். 3 போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.