தேடல்

அரசின் காப்பீடு திட்டம்: விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு: தமிழக அரசின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், சிகிச்சை அளிக்க விரும்பும் மருத்துவமனைகளிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இதன்படி, சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள், அளிக்கும் சிகிச்சையின் விவரப் பட்டியல், அதற்கான போட்டி விலைப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை, திட்ட ஒழுங்குமுறை குழுவினருக்கு சமர்ப்பிக்க வேண்டும். www.cmchistn.com என்ற இணையதளத்தில், 26ம் தேதி வரை, ஆன்-லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் அனைவரும், திட்ட மருத்துவமனை பட்டியலில் இடம் பெறுவர் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது என, தமிழக அரசு அறிவித்துள்ளது.