தேடல்

அவசரம்... அவஸ்தை... தவிப்பில் மேலூர்

மேலூர்:மேலூரில், அரசின் பல்வேறு அலுவலகங்கள் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில், கழிப்பறை வசதி இல்லாததால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்கு குற்றவியல் கோர்ட், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கிளை கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், கிளை சிறை உள்ளன.
தினமும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகின்றனர். அடிப்படை தேவையான கழிப்பிடம், குடிநீர் வசதி இல்லை. இதனால், ஆண்கள் தங்கள் அவசரத்திற்கு சுற்றுச்சுவர் ஓரத்தை பயன்படுத்துகின்றனர். பெண்களின் நிலைதான் பரிதாபம். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
குடிநீர் வேண்டுமானால், கடைக்கு சென்று, பொருட்கள் வாங்கினால் தான் தண்ணீர் தருகின்றனர். தாலுகா வளாகத்தில் காலியிடம் அதிகம் உள்ளது. கலையரங்கள், சிமென்ட் களங்கள் அமைப்பதை விட, அத்தியாவசிய தேவையான குடிநீர், கழிப்பிடத்தை அமைக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.