தேடல்

அதிகாரிகளை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் "சஸ்பெண்ட்'

சென்னை:சென்ட்ரல் ரயில் நிலையத்தில், விஜிலென்ஸ்
அதிகாரிகள் நான்கு பேரை தாக்கிய, டிக்கெட்
பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில்,
ரயில் டிக்கெட் (பறக்கும் படை) பரிசோதகராக
கருணாகரன், 48. பணிபுரிகிறார்.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை பிடிக்கும் போது, அவர்களிடம் வசூலிக்கும் அபராத தொகைக்கு, பில் கொடுப்பதில்லை என, விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு, புகார்தெரிவிக்கப்பட்டது. சென்ட்ரலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் அறையில், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, டிக்கெட் பரிசோதகர் ஆத்திரமடைந்து, விஜிலென்ஸ் அதிகாரிகள் நான்கு பேரையும், தாக்கினார்.
இதுகுறித்து, சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், டிக்கெட் பரிசோதகர் கருணாகரன் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார். ரயில்வே நிர்வாகம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, டிக்கெட் பரிசோதகரை, நேற்று, சஸ்பெண்ட் செய்தது.