தேடல்

அதிகாரிகளுடன் ஜெ., ஆலோசனை

சென்னை : டீசல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டது பற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சில்லறை விற்பனை நிறுவனங்களிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. லிட்டருக்கு ரூ.11.89 உயர்ந்ததால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.730 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.