தேடல்

அ.தி.மு.க.,சேர்மனிடம் ரூ 6 லட்சம் கொள்ளை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி தலைவராக இருப்பவர் மோகனகிருஷ்ணன்.அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், குற்றாலம் ஐந்தருவி சாலையில் பாரத் மாண்டிசேரி பள்ளியைநடத்தி வருகிறார். பள்ளி வளாகத்தில் அவரது அலுவலகம் உள்ளது. நேற்று இரவில்அந்த அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்கள், உள்ளே புகுந்துஅங்கிருந்த ரொக்கப்பணம் ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 860 ரூபாயை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.அவரது புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் விசாரித்தனர்.