தேடல்

ஆசிரியர் கழக கூட்டம்

ஊட்டி:தமிழ்நாடு மேல்நிலைப்

பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம், ஊட்டி அரசு

மேல்நிலை பள்ளியில் நடந்தது.அமைப்பு செயலாளர் சத்யமூர்த்தி வரவேற்றார்.

மாவட்ட தலைவர் வேணுகோபால் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் குமார்

முன்னிலை வகித்தார். குன்னூர் வட்டார தலைவர் சவுந்திரராஜன், மஞ்சூர் வட்டார

செயலாளர் தியாகராஜன், ஊட்டி வட்டார செயலாளர் அர்ஜூணன், கோத்தகிரி வட்டார

தலைவர் ராமகிருஷ்ணன், மகளிர் அணி செயலாளர் அமுதவல்லி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாவட்ட செயலாளர் குமார் பதவி உயர்வு பெற்றதால், மாவட்ட

செயலாளராக பார்த்தசாரதி, இணை செயலாளராக சசிகுமார் ஆகியோர்

தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.