தேடல்

ஆட்சியை விமர்சிப்பதா: இடது சாரிகள் மீது மம்தா பாய்ச்சல்

பெல்டா: எனது ஆட்சியை விமர்சிக்க இடது சாரிகளுக்கு தகுதியில்லை என மேற்குவங் முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங். ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இவரது ஆட்சியை எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூ. கடுமையாக விமர்சித்து வந்தது. இம்மாநிலத்தில் முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள் வராததற்கு மம்தாவின் போக்கே காரணம் என கூறினர்.

இந்நிலையில் மிட்னாபூர் மாவட்டத்தில் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பேசுகையில், எனது ஆட்சியை குறைசொல்ல இடதுசாரிகளுக்கு தகுதியில்லை. கடந்த 34 ஆண்டுகள் ஆட்சி செய்த அவர்கள் மாநிலத்தின் கஜானாவை காலி செய்துவிட்டு கடனாளியாக்கிவிட்டு போயினர்.அதனை நான் ஆட்சிக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வருகிறேன் என்றார்.