தேடல்

ஆனந்த தொல்லை படத்தை கிடப்பில் போட்ட பவர்ஸ்டார்!

லத்திகா படத்தில் நடித்த டாக்டர் சீனிவாசன் என்கிற பவர் ஸ்டார், தற்போது கண்ணா லட்டு தின்ன ஆசையா மற்றும் ஐ படங்களில் முக்கியமான காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இப்படங்களுக்கு முன்னதாக அவர் ஆனந்த தொல்லை என்றொரு படத்தில் வில்லனாக நடித்து வந்தார். அதோடு படத்தை பிரமாண்டமாக படமாக்க பல கோடிகளையும் வாரி இறைத்தார். ஆனால் படம் சரியாக வரவில்லையாம். அதோடு, தாடி கெட்டப்பில் நடித்துள்ள ஒரு சண்டைகாட்சியில் நடித்தபோது இவரது தாடி கழண்டு தொங்குவது போல் படமாக்கி விட்டாராம் இயக்குனர்.

ஆனால் இதை கடைசி வரை யாருமே கண்டுபிடிக்கவில்லையாம். மொத்த பட வேலைகளும் முடிந்தபிறகுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. அதனால் இப்படியொரு படத்தை வெளியிட்டால் தனக்குத்தான் கெட்டப்பெயர் என்று நினைத்த பவர் ஸ்டார் இப்போது அந்த படத்தையே கிடப்பில் போட்டு விட்டார். மேலும், இனி வில்லத்தனமாக வேடங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ள அவர், காமெடி மற்றும் ஹீரோயிசம் கொண்ட படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமாக உள்ளார். அதனால் சில புதுமுக இயக்குனர்களை அழைத்து தனக்கேற்ற கதைகள் தயார் பண்ணுமாறு கூறி வருகிறார் பவர்.