தேடல்

ஆப்கானுக்கு மூன்றாம் கட்டமாக ரூ. 500 கோடி : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: ஆப்கானிஸ்தானுக்கு மூன்றாம்கட்டமாக ரூ. 500 கோடி நிதி உதவி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அடுத்த வாரம் ஆப்கான் பிரதமர் ஹமீத் கர்சாய் இந்தியா வர உள்ளார். நட்பு நாடான ஆப்கானிஸ்தானின்சமூக பொருளாதாரம் தொடர்பானதிட்டங்களுக்கு 2 பில்லியன் டாலர்நிதி உதவி அளிக்க இந்தியா முடிவு செய்தது. இதில் மூன்று கட்டங்களாக நிதி அளிக்க முடிவு செய்ய்ப்பட்டது. .இதையடுத்து100 திட்டங்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டுஜூலை மாதமும்,2008-ம் ஆண்டு இரண்டாம் கட்டமாகவும் நிதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவைக்கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆப்கானிஸ்தானுக்கு மூன்றாம் கட்டமாக ரூ. 500 கோடி (100 மில்லியன் டாலர்) அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.