தேடல்

ஆர்யாவும், விஷாலும் சூப்பர் ப்ளே பாய்ஸ்! ஐஸ் வைக்கிறார் அஞ்சலி!!

அங்காடித்தெரு படத்துக்குப்பிறகு அஞ்சலியின் சினிமா கேரியரே மாறியது. அடுத்த நம்பர்ஒன் நடிகை இவராகத்தான் இருக்கும் என்று எல்லோருமே கருதினர். அந்த அளவுக்கு நடிப்பில் மேன்மைப்பட்டிருந்தார் அஞ்சலி. ஆனால் அடுத்தடுத்து பிசியான நடிகையானார் என்றபோதிலும் மேல்தட்டு ஹீரோக்களை அவரால் எட்டிப்பிடிக்க முடியவில்லை. வளர்ந்து வரும் நடிகர்களுடன் மட்டுமே தொடர்ந்து டூயட் பாடி வந்தார். இந்த நிலையில், தற்போது ஆர்யா, விஷால் என்று கேட்ச் பண்ணி விட்டார்.

இதுபற்றி அஞ்சலியை கேட்டபோது, எந்த நடிகர்களுடன் நடிப்பதற்கும் நானாக அலைவதில்லை. வாய்ப்பு வந்தால் நடிக்கிறேன். ஆர்யா, விஷாலுடன் நடித்துள்ள படங்களும் அப்படி வந்தவைதான என்று சொல்லும் அஞ்சலி, ஆர்யா, விஷால் இருவருமே ரொம்ப ஜாலியான நடிகர்கள். என்னதான் பெரிய மனிதர்களாட்டம் அவர்கள் இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை அவர்கள் இருவருமே சூப்பரான பிளே பாய்ஸ். அந்த அளவுக்கு எப்போதும் ஜாலியாக இருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் என்கிற எந்த பந்தாவும் கிடையாது. அந்த வகையில் அவர்களுடன் தலா ஒரு படத்தில் நடித்து விட்ட எனக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது என்றும் ஐஸ் வைத்து பதில் தருகிறார் அஞ்சலி.