தேடல்

ஆஸி., ஓபன் சானியா ஜோடி தோல்வி

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, செக் குடியரசின் லூசி, பிரான்டிசெக் செர்மாக் ஜோடியை சந்தித்தது. இதில் துவக்கம் முதல் சொதப்பிய சானியா ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 4-6 என சானியா ஜோடி கோட்டைவிட்டது. முடிவில், சானியா ஜோடி 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது.