தேடல்

ஆஸி., ஓபன் பைனலில் அசரன்கா, லீ நா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் பெலாரசின் அசரன்கா வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றார். ரஷ்யாவின் ஷரபோவா தோல்வியடைந்து வெளியேறினார்.ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பெலாரசின் அசரன்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றார்.மற்றொரு போட்டியில் உலகின் நம்பர்-2 வீராங்கனை ரஷ்யாவின் ஷரபோவா, சீனாவின் லீ நாவிடம் 2-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார். இதன் மூலம் சீனாவின் லீ நா இரண்டாவது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றார்.---சானியா ஜோடி தோல்விகலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பாப் பிரையன் ஜோடி, ö குடியரசின் லூசி, பிரான்டிö செர்மாக் ஜோடியிடம் 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி, ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா ஜோடி, ஆஸ்திரேலியாவின் மாத்தீவ் எப்டன், ஜார்மிலா ஜோடியிடம் 3-6, 6-3, 11-13 என்ற செட்களில் வீழ்ந்தது.---