தேடல்

இசைக்கு எழுத்து வடிவம் கண்டுபிடித்துள்ளார் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம்

தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வருபவர் ரமேஷ் விநாயகம். இவர் தற்போது தன் பெயரில் இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளார். இதன் துவக்க விழாவில் யூகி சேது, மதன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் ரமேஷ் விநாயகம் நிருபர்களிடம் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக நான் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். காரணம் நமது பாரம்பரிய இசைக்கு எழுத்து வடிவத்தை கண்டுபிடித்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எந்த ஒரு மொழிக்கும் எழுத்து வடிவம் இருந்தால்தான் அது உலக மக்களுக்கு போய்ச் சேரும். அதேபோல நமது பாரம்பரிய இசைக்கும் எழுத்து வடிவம் இருந்தால் அது உலகம் முழுவதும் பரவும் என்று முடிவு செய்து அதற்கான பணியை கடந்த 4 ஆண்டுகளாக செய்து வந்தேன். எனது முயற்சி பற்றியும், கண்டுபிடிப்பு பற்றியும் மியூசிக் அகடாமியில் இசை அறிஞர்கள் முன் விளக்கிக் கூறினேன். இப்போது அந்த பணிகள் முடிந்து விட்டதால் மீண்டும் இசை அமைக்க வந்து விட்டேன். எனது பணிகள் தொடர்பாக மக்கள் அறிந்து கொள்ளவே இந்த இணைய தளத்தை தொடங்கிருக்கிறேன். இவ்வாறு ரமேஷ் விநாயகம் கூறினார்.