தேடல்

இடியும் நிலையில் பள்ளி கட்டடம்

படப்பை : இடிந்து விழும் நிலையில் உள்ள துவக்கப் பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரியுள்ளனர்.
குன்றத்தூர்

ஒன்றியம், வட்டம்பாக்கம் ஊராட்சியில், 2,000 பேர் வசிக்கின்றனர். இங்கு,

கடந்த 1969ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஏற்படுத்தப் பட்டது.

வட்டபாக்கம், பணப் பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 61 மாணவர்கள்

படிக்கின்றனர். இந்த பழமையான பள்ளிக் கட்டடத்தில், விரிசல் ஏற்பட்டு,

மேற்கூரையின் ஓடுகள் பெயர்ந்துள்ளன. மழைநீர் கசிகிறது.
இதுகுறித்து

பள்ளி மாணவனின் பெற்றோர் ஒருவர் கூறுகையில், பழுதடைந்த கட்டடத்தில்

இயங்கும் இப்பள்ளிக்கு தங்கள் பிள்ளையை அனுப்ப பயமாக உள்ளது. பள்ளியை

சீரமைக்க வேண்டும் என,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்தும்

பயனில்லை. பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், பள்ளிக் கட்டடத்தை

சீரமைக்க வேண்டும் என்றார்.
இது குறித்து, குன்றத்தூர் ஒன்றியக் குழுத்

தலைவர் பழனியிடம் கேட்டபோது, இப்பள்ளியை சீரமைக்க, நபார்டு திட்டத்தின்

கீழ், 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டு உள்ளது. பணி விரைவில்

துவங்கப்படும், என்றார்.