தேடல்

இருசக்கர வாகனங்கள் மீது லாரிகள் மோதல் இருவர் பலி; ஒருவருக்கு கால் முறிவு

சென்னை : வடசென்னையில்,

இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில், இருவர், சம்பவ இடத்திலேயே

இறந்தனர். படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
எர்ணாவூர்,

நெய்தல் நகர் டி.என்.எச்.பி., குடியிருப்பை சேர்ந்தவர் மனோகரன்,34. இவர்,

இருசக்கர வாகனத்தில், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையில்

இருந்த பள்ளத்தில் வாகனம் இறங்கியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது,

அந்த வழியாக வந்த சரக்கு லாரி, அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே,

அவர் இறந்தார். தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து

புலனாய்வுபிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு விபத்து:

காசிமேட்டை சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகுமார்,40. இவரது நண்பர் சங்கர்,38.

இருசக்கர வாகனத்தை நந்தகுமார் ஓட்டினர். பின்புறம், சங்கர்

அமர்ந்திருந்தார். ராயபுரம் ஜி.என்., சாலை சிங்காரவேலர் நகர் சந்திப்பில்,

சாலை நடுவில் இருந்த மாநகராட்சி குப்பை தொட்டியால், வலதுபுறமாக இருசக்கர

வாகனத்தை திருப்பினார் நந்தகுமார்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர்

லாரி மோதியதில், சம்பவ இடத்தில், நந்தகுமார் தலை நசுங்கி பரிதாபமாக

இறந்தார். சங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில்

சிகிச்சை பெற்று வருகிறார்.
காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு

போலீசார், ராயபுரத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் லோகநாதன்,39, என்பவரை கைது

செய்து விசாரித்து வருகின்றனர்.