தேடல்

இரானி கோப்பை: மும்பை பீல்டிங்

மும்பை: ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரானி கோப்பை போட்டி(5 நாட்கள்) இன்று நடக்கிறது. இதில், அபிஷேக் நாயர் தலைமையிலான மும்பை அணி, சேவக்கின் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன.ரெஸ்ட் ஆப் இந்தியா அணி கேப்டன் சேவக் வயிற்றுகோளாறு காரணமாக அணியில் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக ஹர்பஜன் சிங் கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் அபிஷேக் நாயர் பீல்டிங் தேர்வு செய்தார்.ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு முரளி விஜய், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. முதல் நாள் உணவு இடைவேளைக்கு முன் ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் (14), ஷிகர் தவான் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.---