தேடல்

இளைஞர்களுக்கு துணிவிருந்தால்....: ஒபாமா சவால்

வாஷிங்டன்: இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தால், அவர்கள் கூறுவதை தான் காது கொடுத்து கேட்கவுள்ளதாக மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள ஒபாமா சவால் விடுத்துள்ளார். அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறையாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னர் அவர் கூறுகையில், “எனது குழந்தைகள் மலியா (14) மற்றும் சாஷா (11) குறித்து தான் பெருமைப்படுகிறேன். அவர்கள் தற்போது மிக வேகமாக வளர்ந்து, இளம்பெண்களாக, நம்பிக்கை மிகுந்தவர்களாக வளர்ந்து வருகின்றனர். இயல்பாகவே அவர்களுடன் டேட்டிங் செல்ல இளைஞர்கள் விரும்புவது இயற்கையே. இளைஞர்கள் தங்களுக்கு துணிவிருந்தால், கடும் பாதுகாப்புள்ள வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து என்னை வந்து சந்திக்கட்டும். அவர்கள் கூறுவதை நான் காது கொடுத்து கேட்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.