தேடல்

ஈரான் ஏவுகணை சோதனையால் பதட்டம்

டெஹ்ரான்: ஹோம்ரூஸ் நீரிணைப்பு அருகே ஈரான் நடத்திய ஏவுகணை சோதனையால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஈரான் கடந்த சில நாட்களாக ஈரான் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், பயிற்சியின் இறுதி நாளில், 200 கி.மீ., வரை சென்று போர்க்கப்பல்களை தாக்கி அழிக்க வல்ல ஏவுகணை ஒன்றை ஈரான் சோதனை செய்து பார்த்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த ஏவுகணை சோதனை அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.