தேடல்

என்.எஸ்.எஸ்., முகாம் பணி மாணவர்களுக்கு அறிவுரை

குன்னூர்

: பள்ளி பருவத்தில் என்.எஸ்.எஸ்., முகாமில் பணி செய்வது, எதிர்கால

வாழ்க்கையில், சவால்களை சந்திக்க உதவும் என தெரிவிக்கப்பட்டது.தமிழ்நாடு

பள்ளி கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை

மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்களின் சிறப்பு முகாம், கீழ்

பிக்கட்டி கிராமத்தில் நடந்தது.நிறைவு நாள் நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர்

லெனின் வரவேற்று பேசுகையில், பள்ளி பருவத்தில், என்.எஸ்.எஸ்., முகாமில்

இணைந்து, கிராமங்களில் பணியாற்றுவதன் மூலம், வாழ்க்கையில் ஒரு

கட்டுப்பாடையும், சவால்களை எதிர்கொள்ளும் மனநிலையையும் மாணவர்கள் வளர்த்து

கொள்ள முடியும், என்றார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ஆசிரியர்

ராதாகிருஷ்ணன், முகாம் அறிக்கை வாசித்தார். ஓய்வு பெற்ற மாவட்ட தொடக்க

கல்வி அலுவலர் பெள்ளி, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். சாலை

பாதுகாப்பு குறித்து, லட்சுமி நாராயணன் விளக்கினார். ஊர் தலைவர் பெள்ளன்,

ஆசிரியர் கார்த்திக் உட்பட பலர் பேசினர். முகாமில், பணியாற்றிய

மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன; மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

நடந்தன.பள்ளி தமிழாசிரியர் கணேசன், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.