தேடல்

என் தாய் வீடு சென்னை - ப்ரியா ஆனந்த்!

ஸ்ரீதேவி நடித்த, இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் மராட்டிய பெண்ணாக நடித்த ப்ரியா ஆனந்த், மீண்டும், ரான்கிரிஸ் என்ற படத்திலும், மராட்டிய பெண்ணாக நடிக்கிறார். இதையடுத்து, தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் இருந்து, சில பட வாய்ப்புகள்
வந்துள்ளதாம். அதனால், நீங்களும் அடுத்து மும்பைவாசி ஆகிவிடுவீர்களா? என்று கேட்டால்,
அப்படி எந்த யோசனையும் இல்லை என்று சொல்லும் ப்ரியா ஆனந்த், தமிழ்
பெண்ணான நான், என் தாத்தா - பாட்டியுடன், சென்னையில் தான் வசித்து வருகிறேன். மேலும், தற்போது தமிழ், இந்தி மட்டுமின்றி, தெலுங்கிலும், கோ அன்டே கோட்டி என்ற படத்திலும் நடிக்கிறேன். ஆனால், எந்த மொழியில் நடித்தாலும், படப்பிடிப்பு முடிந்ததும், சென்னை திரும்பி விடுவேன். என் தாய் வீடான, சென்னையில்தான் எப்போதுமே குடியிருப்பேன் என்கிறார்.