தேடல்

எப்.ஏ., கோப்பை கால்பந்து மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி

மான்செஸ்டர்:எப்.ஏ., கோப்பை கால்பந்து தொடரின் 3வது சுற்றில், இங்கிலாந்து வீரர் ரூனே கோல் அடித்து கைகொடுக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணி, வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணியை வீழ்த்தியது.இங்கிலாந்தில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும், புட்பால் அசோசியேஷன் (எப்.ஏ.,) சாலஞ்ச் கோப்பை தொடர் நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் நடந்த மூன்றாவது சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட், வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகள் மோதின.காயத்தில் இருந்து மீண்டு, நீண்ட இடைவேளைக்கு பின், மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இடம் பிடித்த இங்கிலாந்து வீரர் ரூனே, 8வது நிமிடத்தில் கோல் அடித்து நம்பிக்கை தந்தார். இதற்கு வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் மான்செஸ்டர் அணி 1-0 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியில் போராடிய இரு அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்கு முன்னேறியது. ஜன. 26ம் தேதி நடக்கவுள்ள 4வது சுற்றில் மான்செஸ்டர் அணி, புல்ஹாம் அணியை எதிர்கொள்கிறது.