தேடல்

எம்மேல ஏன் இந்த கொலைவெறின்னு தெரியல- கொலைவெறி அனிருத்!

தனுஷ் நாயகனாக நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அப்படத்தில் அவரது இசையில் தனுஷ் எழுதி பாடிய ஒய்திஸ் கொலை வெறி என்ற பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனதால் ஒரே படத்தில் பாப்புலர் இசையமைப்பாளராகி விட்டார் அனிருத். அவரது அதிரடியான வளர்ச்சிகேற்ப அவரைப்பற்றி அதிர்ச்சியான செய்திகள் அவ்வப்போது வெளியாவதும் வாடிக்கையாகி விட்டது. குறிப்பாக, ஆண்ட்ரியாவின உதட்டில் முத்தம் கொடுத்தபடி வெளியான அவரது போட்டோக்கள் பெரிய அளவில் புகைச்சலை உருவாக்கின.

இந்த நிலையில், சமீபகாலமாக அனிருத் ஏதாவது சினிமா விழாக்களில் தலைகாட்டினாலே, நீங்கள் யாரையோ காதலிப்பதாகவும், அவரையே கைபிடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறதே என்று நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் அவர் முன்பு சூசக கேள்வி வைக்கின்றனர். அதைக்கேட்டு தடுமாறும் அனிருத், இதுவரைக்கும் எந்த பொண்ணையும் நான் உஷார் பண்ணல. ஆனாலும் உஷார் பண்ணின மாதிரி செய்தி வெளியாகிறது. எம்மேல அவங்களுக்கு ஏன் இந்த கொலைவெறின்னு தெரியல என்று சொல்லி பேச்சை திசை திருப்புகிறார் அனிருத்.