தேடல்

ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுது நாளான இன்று ஏற்றத்துடன் முடிந்துள்ளது. சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை நெருங்குகிறது. நிப்டி 6 ஆயிரம் புள்ளிகளை கடந்து காணப்படுகிறது. இந்த ஏற்றம் பங்கு மூதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.30 புள்ளிகள் அதிகரித்து 19784.08 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 6.65 புள்ளிகள் அதிகரித்து 6016.15 புள்ளிகளோடு காணப் பட்டது. எண்‌ணெய் மற்றும் காஸ் நிறுவனப்பங்குகள் அதிக ஏற்றத்துடன் முடிந்துள்ளது.