தேடல்

ஒடிசா கொள்ளையன் தப்பி ஓட்டம் : திருப்பாச்சேத்தி போலீசார் இடமாற்றம்

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில், வங்கியில் பணம் எடுத்து சென்றவர்களிடம் 6 லட்ச ரூபாயை வழிப்பறி செய்ததில் ஒடிசா கொள்ளையர்கள் நான்குபேர் பிடிபட்டனர். பணத்தை எடுத்துகொண்டு முன்னா, சஞ்சய் ஆகிய இருவர் தலைமறைவாகினர். திருப்பாச்சேத்தி ஸ்டேஷன் லாக்கப் பில் ஒடிசா மாநிலம் சங்கர் ஜூவைன், சந்தோஷ், ஜூகாலா கிஷோர், ரஞ்சன்பிரதான் ஆகிய நான்கு பேரும் விசாரணை கைதியாக இருந்தனர். அப்போது, ஏட்டுகள் சவுந்தரராஜன், சக்கரவர்த்தி ஆகியோர் லாக்கப்பிற்குள் சென்று விசாரித்தனர். நான்கு கொள்ளையர்களும் சேர்ந்து, இவர்கள் இருவரையும் தாக்கிவிட்டு, சங்கர் ஜூவைன் மட்டும், லாக்கப்பை பூட்டி விட்டு தப்பி ஓடினான். சிவகங்கை எஸ்.பி., சக்திவேல், மானாமதுரை டி.எஸ்.பி., வெள்ளத்துரை ஆகியோர், ஸ்டேஷனில் விசாரித்தனர். பணியில் கவன குறைவாக இருந்தததாக கூறி எஸ்.ஐ., பாஸ்கரன், ஏட்டுக்கள் சவுந்தரராஜன், சக்கரவர்த்தி ஆகிய 3பேரையும், சிவகங்கை ஆயுதப்படைக்கு டிரான்ஸ்பர் செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.