தேடல்

ஒரு போன் போதுமே’

குடிநீரில் கழிவுநீர்நல்லூரை அடுத்த பிரபு நகர் இரண்டாவது வீதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது; இப்பகுதியில் உடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்ய வேண்டும்.-எம்.சிவசண்முகம், பிரபு நகர்.
நாய்த்தொல்லை:திருப்பூர் காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டனில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது; குழந்தைகள் ரோட்டில் நடந்து செல்ல பயப்படுகின்றன.-ஏ.சிவஞானமூர்த்தி, அமர்ஜோதி கார்டன்.குப்பை தேக்கம்:1.திருப்பூர் சாமுண்டிபுரம் ரிங் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பையை அள்ள வேண்டும்.-எம்.தனசேகர், சாமுண்டிபுரம்.2.திருப்பூர் மாநகராட்சி 27வது வார்டு ரங்கநாதபுரம் முதல் வீதியில் குப்பை தேங்கியுள்ளது.-எல்.ராஜகோபால், புதுராமகிருஷ்ணபுரம்.துர்நாற்றம் வீசுகிறதுதிருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள சிறுநீர் கழிப்பிடத்தை வாரம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும்; உள்ளே செல்ல முடியாத அளவு துர்நாற்றம் வீசுகிறது.-வி.நந்தகுமார், திருப்பூர்.சாக்கடையில் அடைப்பு1.திருப்பூர் வெள்ளியங்காடு நொய்யல் பாலம் ரேஷன் கடை அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.-எஸ்.ராம்குமார், வெள்ளியங்காடு.2.அவிநாசி, மேற்கு ரத வீதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கியுள்ளது.
-ஏ.இப்ராகிம், மேற்கு ரத வீதி.வீணாகும் குடிநீர்1.வீரபாண்டியில் இருந்து பெரிச்சிபாளையம் செல்லும் ரிங்ரோட்டில் குழாய் உடைந்திருப்பதால், குடிநீர் வீணாகிறது.-எம்.லட்சுமணன், பெரிச்சிபாளையம்.2.பிச்சம்பாளையம் ரேஷன் கடை முன் குழாய் உடைந்திருக்கிறது; குடிநீர், ரோட்டில் செல்கிறது.-எஸ்.ராணி, பிச்சம்பாளையம்.3.திருப்பூர் மாநகராட்சி 60வது வார்டு தெய்வம் தியேட்டர் ரோட்டில் தண்ணீர் வீணாகிறது.-டி.செல்வராஜ், முருகம்பாளையம்.