தேடல்

ஓமந்தூர் ஓ.பி.ஆர்., பள்ளியில் இலவச பாடப்புத்தகம் வழங்கல்

திண்டிவனம் : ஓமந்தூர் பள்ளியில் மூன்றாம் பருவ இலவச பாடப்புத்தகத்தை டி.இ.ஓ., ஆறுமுகம் வழங்கினார்.
திண்டிவனம்

அடுத்த ஓமந்தூர் ஓ.பி.ஆர்., அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் பருவ இலவச

பாடப்புத்தகம் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஏகாம்பரம்

தலைமை தாங்கினார்.
உதவி தலைமை ஆசிரியர் சுமதி வரவேற்றார். ஆசிரியர்கள் கமலா, மணவாளன், சத்தியப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டிவனம்

கல்வி மாவட்ட அலுவலர் ஆறுமுகம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச

பாடப்புத்தகம் வழங்கினார். ஆசிரியர் ராஜாசந்திரசேகர் நன்றி கூறினார்.