தேடல்

ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலைபட்டதாரி ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

புதுச்சேரி:காலியாக

உள்ள விரிவுரையாளர் இடங்களில், பணி ஓய்வு பெற்று சென்றுள்ள

விரிவுரையாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கு புதுச்சேரி பட்டதாரி ஆசிரியர்

சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.சங்கதலைவர் ஜெயராமன், செயலாளர் ஜெயராஜ்

ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: மேனிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள

விரிவுரையாளர் இடங்களுக்குப்பணி ஓய்வு பெற்று சென்றுள்ள

விரிவுரையாளர்களை ரூ. 15 ஆயிரம் சம்பளத்தில் பணி அமர்த்த விளம்பரம்

செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த அறிவிப்பு, ஆசிரியர்

மனதில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. பணிமூப்பின்

அடிப்படையில் காலம் கடந்தாவது பதவி உயர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில்

உள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணத்தில் மண் அள்ளி போடுவதாக

கல்வித்துறையின் போக்கு அமைந்துள்ளது. இந்த அறிவிப்பை கல்வித்துறை உடனடியாக

கைவிட வேண்டும்.ஓய்வு பெற்றோருக்கு மீண்டும் பணி அளித்தல் என்பது, பதவி

உயர்வுக்குக் காத்திருப்போருக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

நிலுவையிலுள்ள வழக்குகளைக் காரணம் காட்டாமல், கல்வித்துறை, ஆசிரியர்களின்

குறைகளைத் தீர்க்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில்

கூறப்பட்டுள்ளது.