தேடல்

கண்திருஷ்டி போட்டு விடாதீர்கள்- அர்ஜூனிடம் சொன்ன ஏ.ஆர்.ரகுமான்!!

கடல் படத்தின் நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்யும் விழாவை நேற்று சென்னையில் நடத்தினார் இயக்குனர் மணிரத்னம். அந்த விழாவில், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து, அர்ஜூன், அரவிந்த்சாமி, கார்க்கி மற்றும் படத்தில் அறிமுகமாகும் கவுதம், துளசி உள்பட ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவை தொகுத்து வழங்கிய அர்ஜூன், மேடைக்கு வந்தவர்களிடம் இரண்டொரு கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் ரகுமான் மேடையில் தோன்றி ஒரு பாடலுக்கு பியானோ வாசித்தார். அதையடுத்து அவரிடம் அர்ஜூன், 20 வருடமாக தொடர்ந்து மணிரத்னம் படத்துக்கு இசையமைக்கிறீர்களே? உங்கள் கூட்டணியின் ரகசியம் என்ன? என்று கேட்டார். அதற்கு, தயவு செய்து கண் திருஷ்டி போட்டு விடாதீர்கள் என்றார் ரகுமான். அதற்கு, என் கண்ணு ரொம்ப நல்ல கண்ணு சார் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் அர்ஜூன்.

இதையடுத்து ரகுமான் மேலும் கூறும்போது, என்னை ரோஜா படத்தில அறிமுகம் செய்தவர் மணி சார். அந்த வகையில் அவர்தான் எனது குரு. இப்போது வரை என்னிடம் இப்படி இப்படி பாடல் வேண்டும் என்றுகூட அவர் கேட்பதில்லை. சொல்லி விட்டு சென்று விடுவார் நானாகத்தான் பண்ணி கொடுப்பேன். அந்த அளவுக்கு அவரது எதிர்ப்பார்ப்புகளை புரிந்து வைத்திருக்கிறேன்.அவரும் அந்த நம்பிக்கையில்தான் வேலையை கொடுப்பார். மற்றபடி எங்கள் கூட்டணி தொடர்வதின் ரகசியம் இதுதான் என்கிறார் ரகுமான்.